சங்கம் உருவான வரலாறு
நமது சங்கத்தை நிறுவியது நமது நிறுவனர் தலைவர் G.K. விவசாயமணி (எ) G. சுப்பிரமணியம் ஆவார். விவசாயத்தின் மீதும், தொழிலாளர்களின் மீதும் பற்றும், பாசமும் கொண்ட நமது நிறுவன தலைவர், அன்றாடம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் படும் இன்னல்களை தீர்க்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் அவரது பொது வாழ்வில் உண்டான அனுபவங்ளை வைத்து கடந்த 2016ம் ஆண்டு ஐவர் குழுவுடன் துவக்கப்பட்டதுதான் நமது அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம். நமது சங்கத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தலைவரின் வழிகாட்டுதலின்படி, அனைவரிடமும் கலந்தாலோசித்து வகுக்கப்பட்டது. சங்கம் 2017ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
நமது சங்கத்தின் இடி முழக்க வாசகமான "போராட்டமே வாழ்வின் உற்சாகம்", "போராடினால் உண்டு பொற்காலம்" என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி நமது சங்கம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் விவசாயிகள் போரட்டத்திற்கு வித்திட்டவர்கள். இன்றளவும் விவசாயிகள் போராட்டத்தின் வாயிலாக தங்களது உரிமைகளை போராடி பெற்று வருகிறார்கள். நமது சங்கத்தில் தொழிலாளர்கள் நலன் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பை உறுதி செய்து அவர்களது குறைகளுக்கு தீர்வளித்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை தலைவர் முன்னெடுத்து வருகிறார். நமது சங்கம் ஐவர் குழுவுடன் தொடங்கப்பட்டு தற்போது உறுப்பினர்களை இணைத்து, அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்தும் அவர்களின் மூலமாக பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை திறந்து தமிழகத்திலேயே முதன்மையான சங்கமாக திறம்பட செயலாற்றி வருகிறது.
பெண்ணுரிமை முன்னுரிமை
நமது சங்கத்தில் பெண்களுக்கு முன்னுரிமை என்ற வாக்கியத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நமது சங்கத்தில் பெண்களுக்கு நிர்வாக பொறுப்புகளில் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. நமது சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் மகளிரணியினர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நமது சங்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கலந்து கொள்வது நமது சங்கத்தின் சிறப்பு. நமது சங்கத்தின் முக்கிய சிறப்பம்சம் நமது சங்கத்தில் புதிதாக இணையும் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது.
நமது சங்கத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் அட்டையை அனைவரும் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் வேளாண் துறைக்கு வழங்கும் பல்வேறு சலுகைகளை பெற்று பயனடைந்து வருவது சிறப்புக்குரிய ஒன்று. நமது சங்கத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் ஆகியவை ராணுவ கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. சங்கத்தில் உள்ள அனைவருக்கும் நமது தலைவர் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறார்.
சங்கத்தின் கொள்கைகள்
- அன்னதான திட்டம் : உணவுத் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகள்.
- பாரம்பரிய விதை வழங்கல் : பாரம்பரிய விதைகள் மற்றும் பயிற்சி வழங்குதல்.
- கல்வி உதவி : பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் மற்றும் ஆலோசனை.
- காப்பீட்டு திட்டம் : அவசர மருத்துவ உதவிகள் மற்றும் பாதுகாப்பு.
- திருவிழா ஆதரவு : உள்ளூர் விழாக்களுக்கு உதவி மற்றும் ஏற்பாடுகள்.
- முகாம்கள் & பசு உதவிகள் : தொற்று/வெளிப்பு காலங்களில் குடும்பங்களுக்கு நிவாரணம்.
சங்கத்தின் உறுதிமொழிகள்
- சங்கம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளில் தலைவரின் முடிவுக்கும் சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்..
- சங்கத்தின் அனைத்து கொள்கைகள் மற்றும் அனைத்து கோட்பாடுகளை கடைபிடிப்பேன்.
- சங்கம் சார்ந்த பணிகளை சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு சிறந்த முறையில் குறித்த நேரத்தில் செய்து முடிப்பேன்.
- நமது சங்க விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொண்டு எனக்கான பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்.
- தலைமை அலுவலகத்தின் வாயிலாக வரும் அறிவிப்புகள் மற்றும் தகவல்களை தலைவரின் கட்டளையாகக் கருதி செயல்படுவேன்.
- நமது சங்கத்தின் அடையாளங்களாகிய பச்சைத்துண்டு, சங்க கோடி மற்றும் சின்னங்கள் ஆகியவற்றின் மாண்பை மனதில் கொண்டு உரிய மரியாதையுடன் கையாளுவேன் தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் .