“எல்லோருக்கும் எல்லாமும்”
“அன்னம் பகிர்ந்திடு”
“எண்ணம் விரித்திடு”
நமது தலைவர்
திரு. G.K. விவசாயமணி (எ) G. சுப்பிரமணியம் அவர்கள் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் நாள் திண்டுக்கல் மாவட்டத்தில் எளிய வேளாண் குடும்பத்தில் தெய்வத்திரு. குருவைய கவுண்டர் - காளியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.
அவரது பள்ளிப்பருவத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து விவசாய சங்கங்களின் சார்பில் "கட்டை எடுத்தால் பட்டை எடுப்போம்" என்ற போராட்டம் வெடித்தது அப்போது காவல் துறையினர் விவசாயிகளின் கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியது. அப்போது வேடசந்துார் ஆத்துமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது 6 விவசாயிகள் தனது இன்னுயிரை இழந்தனர்.
அந்த போராட்டத்தின் விளைவாக தனக்குள் ஏற்பட்ட தாக்கத்தால் விவசாயிகளின் துயர் துடைக்க பாடுபட வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி இருந்தது. அந்த வகையில் விவசாயிகளின் மீது கொண்ட தீராத பற்றால், திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த விவசாய சங்கத்தில் தன்னை 2000ஆம் ஆண்டில் இணைத்து கொண்டு அந்த அமைப்பில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை நிலை நிறுத்தி கொண்டார்.
அந்த அமைப்பில் தனது செயல்பாடுகளால் தனித்துவம் பெற்று விளங்கினார். இவரது பொதுக்கூட்டம் தலைமையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாநாடு, மற்றும் போராட்டங்களை சிறப்பாக நடத்தி வெற்றி கண்டவர்.
அந்த அனுபவங்களை வைத்து கடந்த 2016ம் ஆண்டு ஐவர் குழுவுடன் நமது அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தை நிறுவினார். 2017ஆம் ஆண்டு பதிவு செய்து சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
நமது நிறுவனத் தலைவரின் பொன்மொழிகள்
- அறியாமை முயலாமை இயலாமை என்ற மூன்றையும் அறவே ஒதுக்க வேண்டும்..
- துன்பத்தையும், இழப்பையும் பிறரிடம் பகிராதீர்கள்.
- அன்றாடம் உழையுங்கள். உழைப்பால் வந்த வருமானத்தை வீணாக்காமல் சேமியுங்கள்.
- அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.
- இயன்றால் பிறருக்கு உதவி செய்யுங்கள்.
- மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதை கொள்கையாக்குங்கள்.