ஏப்ரல் 9 : வேடசுந்தார் துப்பாக்கி கூடு நினைவு தினம்
கடந்த 09.04.1978ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார், ஆத்துமேட்டில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். மேலும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் திரு. நாச்சிமுத்து கவுண்டர், திரு.கருப்பசாமி ஆசிரியர், திரு. சின்னச்சாமி கவுண்டர், திரு. சுப்பிரமணி, திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. மாணிக்கம் ஆகிய 6 விவசாயிகள் தங்களது இன்னுயிரை இழந்தனர்.
அவர்களது நினைவாக ஆத்துமேட்டில் உள்ள ஸ்தாபி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் நிறுவனத் தலைவரின் தலைமையில் திரளான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் சென்று மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாம் அவர்களின் நினைவை போற்றுவதில் நமது சங்கம் பெருமிதம் கொள்கிறது.