டிசம்பர் 21 : உழவர் பெருநாதலவர் சி. நாராயணசாமி நாயுடு நினைவு தினம்
விவசாய சங்கங்களின் தந்தை எனப் போற்றப்படும் உழவர் பெருந்தலைவர் திரு. சி. நாராயணசாமி நாயுடு நினைவு தினம் டிசம்பர் 21 ஆகும். இவரது நினைவை போற்றும் வகையில் அவரது தோட்டம் அமைந்துள்ள கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்னர் தமிழக அரசு சார்பில் அரசு செலவில் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அது விவசாயிகளின் உரிமைகளை கட்டிக்காத்த போராளிகளின் பெருமைகளை கம்பீரமாய் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது இவரது மணிமண்டபம்.
அவரது மணிமண்டபத்தில் நமது நிறுவன தலைவர் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் திரளாக சென்று திரு. சி . நாராயணசாமி நாயுடு திருவுருவ சிலைக்கு அனிவித்து மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நாளில் நாம் உழவர் பெருந்தலைவர் நினைவை போற்றுவதில் நமது சங்கம் பெருமிதம் கொள்கிறது. இவரது நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு முதல் இவரது பெயரில் விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதற்கு தமிழக அரசுக்கு நமது சங்கத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.