பிப்ரவரி 6 : உழவர் பெருநாதலவர் சி. நாராயணசாமி நாயுடு பிறந்த தினம்
விவசாய சங்கங்களின் தந்தை எனப் போற்றப்படும் உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு அவர்கள் கடந்த 06.02.1925ஆம் ஆண்டு சின்னம்ம நாயுடு அரங்கநாயகி இணையருக்கு மகனாக பிறந்தார். இவரது பிறந்த தினத்தில் தான் அவரது தோட்டம் அமைந்துள்ள கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் அமைந்துள்ள மணிமண்டபம் தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவரது பிறந்த நாளன்று மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நாளில் நாம் உழவர் பெருந்தலைவர் நினைவை போற்றுவதில் நமது சங்கம் பெருமிதம் கொள்கிறது. இவரது பிறந்தநாள் நினைவாக கோவை மாவட்டம் துடியலூர் கோவில்பாளையம் கூட்டுச் சாலையின் அருகே உள்ள குருடம்பாளையம் என்.ஜி.ஒ காலனியில் உள்ள இரயில்வே மேம்பாலத்திற்கு தமிழக அரசு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் பெயரை வைத்து பெருமைபடுத்தியுள்ளது. மேலும் இவரது நுாற்றாண்டை குறிக்கும் வகையில் நுாற்றாண்டு வளைவு கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசுக்கு நமது சங்கத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.