ஜூலை 5 — உழவர் தியாகிகள் தினம்
போராடினால் உண்டு பொற்காலம் !
போராட்டமே வாழ்வின் உற்சாகம் !!

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம்

(Regd.,14/2017)

ஜூலை 5 : உழவர் தியாகிகள் தினம்

ஜூலை 5 ஸ்கேன்

கடந்த 1970ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை விவசாய தமிழகமெங்கும் நடந்த துப்பாக்கி சூட்டின் மூலமாக விவசாயிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சங்கங்களின் சார்பில் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஜீலை 5ம் தேதி உழவர் தியாகிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஜீலை 5ம் தேதி தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் உழவர் தியாகிகள் தினத்தில் விவசாயிகளின் கோரிக்களை வலியுறுத்தி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் காரணமாக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.5,00,000/-வழங்கப்பட்டது. ஆகவே ஜீலை 5ம் தேதி விவசாய சங்கங்களுக்கு முக்கியமான தினங்களில் பல்லடம் துப்பாக்கிக்சூடு நினைவு தினமும் ஒன்று.

கடந்த 1972ம் வருடம் ஜீலை மாதம் 5ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கே.அய்யம்பாளையத்தில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் விவசாய தியாகிகள் சுமார் 20 வயதுடைய திரு. முத்துகுமாராமசாமி மற்றும் 27 வயதுடைய திரு. சுப்பையன் ஆகிய இருவர் இன்னுயிரை இழந்தனர். அவர்களது நினைவாக கோவை ஜில்லா விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நினைவு தூண் நிறுவப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கே.அய்யம்பாளையத்தில் உள்ள ஸ்தூபி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தலைமையில் நினைவிடத்தில் நிறுவனத் தலைவரின் திரளான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் சென்று மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நாளில் நாம் அவர்களின் நினைவை போற்றுவதில் நமது சங்கம் பெருமிதம் கொள்கிறது.

← நிகழ்வுகள் பக்கத்திற்குத் திரும்பு