ஜூன் 19 : பெருமாநல்லூர் துப்பாக்கிச் சூடு நினைவு தினம்
கடந்த 1970ம் ஆண்டு ஜீன் 19ம் தேதி கோவை ஜில்லா, தற்போதைய திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுாரில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு மின் கட்டணத்தைக் குறைக்க கோரி போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் விவசாயிகளின் மாட்டு வண்டிகள் பெருமாநல்லுாரை நோக்கி படையெடுத்து நின்றது அங்கு கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் நிரம்பி வழிந்தது அந்த விவசாயிகள் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். தடியடி நடத்திய பின்னரும் விவசாயிகள் கூட்டத்தை கலைக்க முடியவில்லை.
அதனால் இறுதியில் காவல்துறையினரால் முதன்முதலில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முடிவு செய்தார்கள். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான புதுப்பாளையத்தை சேர்ந்த 25 வயதுடைய திரு. ராமசாமி கவுண்டர், வாராணாசிபாளையத்தை சேர்ந்த 37 வயதுடைய திரு.மாரப்ப கவுண்டர் மற்றும் ஈச்சம்பள்ளத்தை சேர்ந்த 32 வயதுடைய திரு.ஆயிக் கவுண்டர் ஆகிய 3 விவசாயிகள் தங்களது இன்னுயிரை இழந்தனர்.
அவர்களது நினைவாக கோவை ஜில்லா விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நினைவு தூண் நிறுவப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார், கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்தூபி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் ஆண்டு தோறும் நமது சங்கத்தின் நிறுவனத் தலைவரின் தலைமையில் திரளான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் சென்று மலர் வளையம் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு பின்னர் விவசாய வைத்து விவசாயிகள் கோரிக்களை வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டம் செய்தார்கள். அதன் விளைவாக தான் இன்று வகையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத விவசாயிகளுக்கு விலையில்லா இலவச மும்முனை மின்சாரம் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு அடித்தளமாக அமைந்த நாள் தான் ஜீன் 19. இந்த நாளில் நாம் அவர்களின் நினைவை போற்றுவதில் நமது சங்கம் பெருமிதம் கொள்கிறது. நமது சங்கம் 2016ல் துவக்கப்பட்ட போது முதல் நிகழ்வாக இந்த நிகழ்வைத் தான் நிறுவனத் தலைவர் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.