மே 1 — தொழிலாளர்கள் தினம்
போராடினால் உண்டு பொற்காலம் !
போராட்டமே வாழ்வின் உற்சாகம் !!

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம்

(Regd.,14/2017)

மே 1 : தொழிலாளர்கள் தினம்

மே 1 ஸ்கேன்

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தொழிலாளர்கள் தினத்தை நமது சங்கத்தின் சார்பிலும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தொழிலாளர்கள் இல்லாமல் விவசாயம் செய்ய இயலாது என்பதைக் கருத்தில் கொண்டு தான் நமது தலைவர் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் இணைக்கும் வகையில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் என்ற சங்கத்திற்குப் பெயர் சூட்டினார்.

ஒவ்வோர் ஆண்டும் நமது சங்கம் மே 1 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தி தொழிலாளர்களின் நலனுக்காக உரையாற்றி விழாவை நடத்துகிறது. அந்த நாளில் நமது சங்கத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துவருகின்றனர்.

ஆடி 5 : பாரம்பரிய விதை நெல் வழங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம், ஒலியமங்கலத்தில் நமது மாநில சங்கத்தின் நிறுவனத் தலைவரின் ஆனைக்கிணங்க இயற்கை வேளாண்மைப் பிரிவு தலைவர் திரு. ரெ. முத்துச்சாமி தலைமையில் வருடந்தோறும் தமிழ் மாதம் ஆடி 5ஆம் தேதி பாரம்பரிய விதை நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

← நிகழ்வுகள் பக்கத்திற்குத் திரும்பு